இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சிவி. எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரது நடிப்பில் 1990ம் ஆண்டில் வெளிவந்த 'ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' மற்றும் 2002ல் வெளிவந்த 'இந்திரா' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்புகள் சரியான நேரத்தில் வெளிவரும் என அப்படங்களின் தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார். தமிழில் டப்பிங் ஆகி வந்த 'நடிகையர் திலகம், கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அஷ்வினி தத்.
சிரஞ்சிவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'இந்திரா' படம் ரீ-ரிலீஸ் ஆனது. அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் அஷ்வினி தத், இயக்குனர் பி கோபால், வசனகர்த்தா பருச்சூரி பிரதர்ஸ், இசையமைப்பாளர் மணிசர்மா ஆகியோர் சிரஞ்சீவியை அவரது வீட்டில் சந்தித்தனர். அதற்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் அஷ்வினி தத் மேற்கண்ட இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் பற்றியும் பேசினார்.
''ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' படத்தை ராகவேந்திரா ராவ் இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். சிரஞ்சீவி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். பேபி ஷாலினி, அம்ரிஷ் புரி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருந்தனர். அப்படம் தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் வரவேற்பைப் பெற்றது.
'இந்திரா' படத்தை பி கோபால் இயக்க, மணி சர்மா இசையமைக்க, சிரஞ்சீவி, ஆர்த்தி அகர்வால், சோனாலி பிந்த்தே மற்றும் பலர் நடித்திருந்தனர். அன்றைய கால கட்டத்தில் அதிக வசூலைக் குவித்த தென்னிந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் இது.