சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் மற்ற ஆண்களால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து படக்குழுவில் உள்ள முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்தாலும் அதனால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வரலாம் என அது குறித்து பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் அப்படி ஒரு நடிகர் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதை பார்த்த படத்தின் இயக்குனர் அந்த நடிகரை படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்த நிகழ்வும் நடந்து தான் இருக்கிறது.
இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 படத்தின் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் தான். மலையாள திரையுலகில் பெண்கள் அதிக அளவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்படுவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை வரவேற்று கருத்து கூறியுள்ள பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர், ‛‛நான் இயக்கிய 2018 படத்தில் இதே போன்ற ஒரு நடிகர் படத்தில் நடித்த ஒரு நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டபோது அவரை உடனடியாக படத்திலிருந்து தூக்கினேன். அவர் நடித்த காட்சிகளையும் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கினேன். நீங்கள் இப்போது அந்த படத்தை பார்த்தீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒரு கதாபாத்திரத்தின் கன்டினிட்டி மிஸ் ஆகி இருப்பதை கவனிக்க முடியும். அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது” என்று கூறியுள்ளார்.