ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம் நாளை(ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வந்த 'சேது' படம் விக்ரமிற்கும், பாலா இயக்கத்தில் வந்த 'நந்தா' படம் சூர்யாவுக்கும் தமிழ் சினிமா உலகில் அவர்களது பயணத்திற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்கள். அதற்கடுத்து விக்ரம், சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து 'தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.