வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறிவிட்ட அர்ஜூன் தாஸ், வசந்தபாலனின் அநீதி படத்தை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். குடும்பப் பாங்கான கதை பின்னணி கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அடிக்கடி ரகுவரன் எங்கே வரச் சொல்லுங்கள், அஞ்சலி ரெடியாகிவிட்டாரா? அழைத்து வாருங்கள் என அழைப்பாராம்.
உடனே அர்ஜூன் தாஸும், அதிதி ஷங்கரும் அவர் முன்னாள் வந்து நிற்பார்களாம். படத்தில் இவர்கள் இருவரது கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் இவை. இயக்குனர் இந்த பெயரை சொல்லி அழைத்தால் வரும் அளவிற்கு இந்த இரண்டு நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி விட்டார்களாம். இந்த படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.