ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள்.
பைனான்சியர் தரப்பில் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்குப்பின்னும் அவர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்திருக்கின்றனர். அதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று இடைக்காலத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் 1 கோடி டெபாசிட் செய்தால் மட்டுமே 'தங்கலான்' படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகும். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.