மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி |
விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் செயல்பாடுகள் பற்றி கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் கூறிவந்தார்.
முதல் மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் மைய பகுதியாக திருச்சி இருப்பதாலும், வரலாற்ற சிறப்பு மிக்க பல அரசியல் மாநாடுகள் திருச்சியில் நடந்திருப்பதாலும் திருச்சியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் கட்சி நிர்வாகிகள் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாநாடு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. சரியாக தேதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.