ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
கடந்த ஆண்டில் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'விருபாக்ஷா'. வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கார்த்திக்கின் அடுத்த படத்தை விருபாக்ஷா படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் ,சுகுமார் ரைட்டிங் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர்.
இதில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிப்பதாகவும், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. பைசன் படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகு இதில் துருவ் விக்ரம் இணைவார் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.