சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சிங்கள நடிகர்கள் அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இலங்கை பிரதமராக இருந்த சந்திரிகா பண்டாரநாயகாவின் கணவரும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். விஜய குமாரதுங்க, சந்திரிகாவின் கணவர் மட்டுமல்ல சிங்கள திரையுலகின் சூப்பர் ஸ்டார். 114 படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த தமிழ் படம் 'நங்கூரம்'. 1979ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய குமாரதுங்க உடன் லட்சுமி, முத்துராமன், வி.எஸ்.ராகவன், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இலங்கை இயக்குனர் திமிதி வீர ரத்ன இயக்கி இருந்தார். வி.குமார் மற்றும் பிரேமசிறி கேமதாச என்ற இலங்கை இசை அமைப்பாளர் இசை அமைத்தனர்.
விஜய குமாரதுங்க இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இளைஞனாக நடித்திருந்தார். பிற்காலத்தில் இலங்கை அரசியலில் தீவிரம் காட்டினார். அகிம்சை வழியில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்தார். 1988ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.