'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான். இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்தார். ஒரு சில பாடல்கள் பாடி உள்ளார். இந்த நிலையில் தற்போது 'மின்மினி' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராகி இருக்கிறார். ஹலிதா ஷமீம் இயக்கி உள்ள இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.
படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. பின்னணி இசையும் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து கதீஜா கூறும்போது "மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும். தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க 'மின்மினி' போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம் , மனோஜ் பரமஹம்சா ஆகியோருக்கு எனது பணிவான நன்றிகள்” என்றார்.