ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் நடித்த எந்த படமும் வெற்றி பெறாததால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரையோடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார் பூர்ணா. அங்கு சென்று சில படங்களில் மீடியம் கிளாமரை வெளிப்படுத்தி வந்தவர், இப்போது கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். என்றாலும், சிங்கிள் ஹீரோயினாக நடிக்கவில்லை. அப்படத்தில் இன்னொரு ஹீரோயினியாக வழக்கு எண் மனீஷாவும் இருக்கிறார்.
அப்படியென்றால் ஜன்னல் ஓரம் படத்தில் நீங்கள் யாருக்கு ஜோடி? என்று பூர்ணாவைக்கேட்டால், இதே படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இன்னொரு ஹீரோவாக மைனா விதார்த்தும் இருக்கிறார். ஆனால் நான் யாருக்கு ஜோடி என்பதை விட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறேன்.
சும்மாவாட்டம் இரண்டு பாட்டுக்கு ஆடி கதாநாயகி என்று என்னை பெருமைப்படுத்துவதை விட கதைக்கு ஆணி வேறான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்று சொல்லும பூர்ணா, சிலர் அப்படத்தில் நடித்தபோது, எனக்கும், மனீஷாவுக்கும் இடையே நிறைய ஈகோ பிரச்னை வந்தாக சொல்கிறார்கள். ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை, மேலும், மனீஷா ஒரு புதுமுக நடிகை. எனக்கெல்லாம் அவர் எப்படி போட்டி நடிகையாக முடியும் என்கிறார் பூர்ணா.