விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! |

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள கமல்ஹாசன், விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களையும் பேசி வந்தார். விரைவில் இதன் 8வது சீசன் துவங்க உள்ளது. இந்த முறையும் கமல் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. ஆனால் பல படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து விவலகுவதாக சில தினங்களுக்கு முன் செய்தி வந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளார்.
இதுதொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுக்கிறேன். 7 ஆண்டுகால பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சிறு ஓய்வை எடுக்கிறேன். எனது சினிமா தொடர்பான அடுத்தடுத்த பணிகளால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவுக்கு நன்றி. உங்களால் தான் இந்த நிகழ்ச்சி இந்தியளவில் முக்கியமான ரியாலிட்டி ஷோவாக மாறியது. பிக்பாஸின் வரப்போகும் சீசனும் வெற்றி பெறும்'' என தெரிவித்துள்ளார்.