ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
1999ம் ஆண்டு பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விக்ரம், அபிதா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'சேது'. இயக்குனர் பாலாவின் முதல் படம். சினிமாவில் ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருந்த விக்ரமிற்கு அந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறினார். கமல்ஹாசனுக்குப் பிறகு சிறந்த நடிகர் என்றால் அது விக்ரம்தான் என்று ரசிகர்களும் பேச ஆரம்பித்தார்கள். அதன்பின் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளிவந்த 'பிதாமகன்' படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் அவரது பேச்சில், “நான் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா ரஞ்சித் - விஜய் - மணிரத்னம் - ஷங்கர் - ஹரி போன்ற இயக்குநர்களுக்கு தான் சேரும். ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம். வடிவமைத்த கதாபாத்திரம். கொடுத்த உத்வேகம் தான் காரணம். இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது” என்றார். மற்ற இயக்குனர்களின் பெயரைச் சொன்ன விக்ரம், பாலா பெயரை மட்டும் சொல்ல மறந்துவிட்டார்.
திருப்புமுனை தந்த 'சேது', தேசிய விருது தந்த 'பிதாமகன்' ஆகிய படங்களின் இயக்குனரான பாலாவை விட மற்ற இயக்குனர்கள் எந்த விதத்தில் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தனது மகன் துருவ் நடித்த வர்மா படம் பிரச்னைக்கு பின் பாலாவும், விக்ரமும் பேசிக் கொள்வதில்லை. அதனால் தான் பாலா பெயரை விக்ரம் குறிப்பிடவில்லை என்கிறார்கள். இது குறித்து விக்ரமிடம் சீக்கிரமே ஒரு அறிக்கை வர வாய்ப்புள்ளது.