லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை |
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, மலையாளத்தில் பெங்களூரு டேய்ஸ், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஆனாலும் பீக்கில் இருந்த சமயத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கினார். இந்த நிலையில் மீண்டும் ட்ரான்ஸ், அண்டே சுந்தரானிக்கி என சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா.
தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சூட்சும தர்ஷினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான நான்சென்ஸ் என்கிற படத்தை இயக்கிய எம்.சி ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.