ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மலையாள திரை உலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஹரிஸ்ரீ அசோகன். தமிழில் ரீமேக் செய்யப்பட பல மலையாள படங்களில் இவர் நடித்திருந்த பல கதாபாத்திரங்களில் தான் நடிகர் வடிவேலு அதிகம் நடித்துள்ளார். இவரது மகன் அர்ஜுன் அசோகன் கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ரோமாஞ்சம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த வருடம் தான் நடித்து வெற்றி பெற்ற பஞ்சாபி ஹவுஸ் என்கிற படத்தின் பெயரிலேயே தனது புதிய வீட்டை கட்டிய ஹரிஸ்ரீ அசோகன் அதற்காக ஒரு தனியார் கம்பெனியிடம் இருந்து 2 3/4 லட்சம் மதிப்பிலான டைல்ஸை வாங்கியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து காண்ட்ராக்டர் மூலமாக இந்த டைல்ஸை பதித்துள்ளார். ஆனால் டைல்ஸ் பதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவற்றில் விரிசல் ஏற்பட்டு உடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து காண்ட்ராக்டரிடம் கேட்டபோது டைல்ஸ் நிறுவனத்தின் மீது அவர் குற்றம் சாட்டினார். டைல்ஸ் நிறுவனத்திடம் இது குறித்து ஹரிஸ்ரீ அசோகன் முறையிட்டும் பல மாதங்களாக அவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை இதனை தொடர்ந்து எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஹரிஸ்ரீ அசோகன். இந்த வழக்கில் எதிர் தரப்பில் வாதிட்ட டைல்ஸ் நிறுவனத்தினர் ஹரிஸ்ரீ அசோகன் தங்களிடம் தான் டைல்ஸ் வாங்கினார் என்பதற்கான பில்லையும் அதற்கான வாரண்டியையும் சமர்ப்பிக்க தவறிவிட்டார் என்று கூறி தப்பிக்க நினைத்தனர்.
ஆனால் ஆதாரங்களின்படி அவர்கள் பக்கம் தவறு இருப்பதை கண்டறிந்த நீதிமன்றம் மோசமான டைல்ஸை புத்திசாலித்தனமாக ஹரிஸ்ரீ அசோகனிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்றது மட்டுமல்லாமல் அந்த குறைபாட்டை சரி செய்தும் கொடுக்காமல் ஏமாற்ற முயற்சித்ததை கண்டுபிடித்தது. இதனை தொடர்ந்து அந்த டைல்ஸ் நிறுவனம் ஹரிஸ்ரீ அசோகனுக்கு 16.5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகையாகவும் வழக்கு செலவுக்காக 1.25 லட்சம் சேர்த்து 17.83 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் ஹரிஸ்ரீ அசோகனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.