2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' . பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர் நாயகியாக நடித்துள்ளார். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் நடக்கும் போர் பற்றியும் இருபெரும் சக்திகளுக்கு இடையேயான மோதலையும் இந்த டிரைலர் காட்டுகிறது. இளமை ததும்பும் காதல், அம்மா சென்டிமெண்ட், ஆக்ஷன் என டிரைலர் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது.