ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 300-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகின. இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் போராடியவர்கள் பலரும் துரித கதியில் மீட்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண உதவி வழங்கும் விதமாக திரையுலாக சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
மொழி பாகுபாடு இல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கில் இருந்தும் நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு இளம் முன்னணி நடிகரும் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவருமான அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். தற்போது நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் நடிகர் ராம்சரண் இருவரும் இணைந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பதிவில், “நூற்றுக்கணக்கான மக்கள் இயற்கை சீற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களில் பலியான சம்பவம் மனதை ரொம்பவே வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து எனது இதயம் கனக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவளிக்கும் ஒரு ஆரம்பத் தொகையாக நானும் ராம்சரணும் இணைந்து ஒரு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த வலியில் இருந்து மீண்டு வர என்னுடைய பிரார்த்தனைகள்” என்று கூறியுள்ளார்.