ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு, சந்தியாராகம்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் சொக்கலிங்க பாகவதர். 80களில் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் இவர் பாகவதர் காலத்து ஆளு. அந்தக் காலத்திலேயே 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நாரதராக நடித்தார். துக்காராம், ரம்பையின் காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக நாடகங்களில் நடித்து வந்தவரை 1988ம் ஆண்டு 'வீடு' படத்தின் மூலம் திரைக்கு கொண்டு வந்தார் பாலுமகேந்திரா. தொடர்ந்து சதிலீலாவதி, தையல்காரன், ஜென்டில்மேன், அம்மா பொண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
தனியாக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த சொக்கலிங்க பாகவதரை பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து விட்டார். அப்போது ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம்.
90வது வயதிலும் நடித்து வந்தார். 2002ம் ஆண்டு தனது 92வது வயதில் காலமானார். நடிப்பில் மட்டுல்லாது பாடுவதிலும் திறமையானவராக இருந்தார். 1934ம் ஆண்டு இவரின் பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனிதான் இவருக்கு பாகவதர் பட்டம் கொடுத்தது.