என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஊர்வசி ரவுட்டேலா. சமீபத்தில் ஓட்டல் பாத்ரூம் ஒன்றில் குளிக்கும் வீடியோ லீக் ஆனது. இதை தொடர்ந்து ஊர்வசியும், அவரது மானேஜரும் பேசிக் கொள்ளும் போன் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில் இருவரும் இந்த வீடியோ குறித்து சீரியசாக பேசிக் கொண்டனர். இதனால் அந்த வீடியோ உண்மையானது என்றே எல்லோரும் நம்பினார்கள்.
இந்த நிலையில் அந்த வீடியோ ஊர்வசி தற்போது நடித்து வரும் 'குஸ்பை தியே' என்ற படத்திற்காக படம்பிடிக்கப்பட்ட காட்சி என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக இதனை லீக் செய்துள்ளனர். ஊர்வசியும் அதை அதிர்ச்சியோடு தனது மானேஜருடன் பகிர்ந்தது “எல்லாமே நடிப்பா கோபால்”... முமெண்டுதான்.
அதுமட்டுமல்லாமல் எதுவுமே தெரியாத மாதிரி தற்போது ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ஊர்வசி. அதில் "இந்த வீடியோவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். நிச்சயமாக இது எனது தனிப்பட்ட வீடியோ கிடையாது. இது நான் நடிக்கும் 'குஸ்பை தியே ' படத்தின் ஒரு பகுதி. இதற்கு முன்பு இதுபோன்ற என் வீடியோ வெளியானது கிடையாது. எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஒன்றைச் செய்யக்கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு மலிவான விளம்பரம் தேவையா என ரசிகர்கள் காட்டமாக அவரை விமர்சித்து வருகின்றனர்.