அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் |
சமீப நாட்களாக படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு தளத்தில் தொழிலாளர் ஒருவர் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். இந்தநிலையில் மலையாளத்தில் தற்போது நடைபெற்று வரும் 'ப்ரொமான்ஸ்' படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடித்த இளம் நடிகர்கள் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜுன் ஜோஸ் என்பவர் இயக்கி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள பிரபலமான எம் ஜி ரோட்டில் நள்ளிரவு முதல் நடைபெற்று வந்தது.
லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் ஹீரோவின் நண்பனாக படம் முழுவதும் பயணித்த சங்கீத் பிரதாப், ரோமாஞ்சம் படத்தில் கதாநாயகனாக நடித்த அர்ஜூன் அசோகன் உள்ளிட்ட ஐந்து பேர் பங்கு பெற்ற கார் சேசிங் காட்சி ஒன்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென ஒரு திருப்பத்தில் இரண்டு பைக்குகள் எதிர்பாராமல் நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து கட்டுப்பாட்டை இழந்து அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பின்னால் துரத்தி வந்த காரும் இவர்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் உள்ளே பயணித்த ஸ்டண்ட் மேன் மற்றும் மேலே சொன்ன நடிகர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நடிகர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதி விரைவாக வண்டி ஓட்டியதாக கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடைபெற்றாலும் இது வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.