'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயக்குனர் கவுதம் மேனனின் பூர்வீகம் மலையாளம் தான் என்றாலும் இத்தனை வருடங்களில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ள கவுதம் மேனன், மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை நடிகர் மம்முட்டியே சொந்தமாக தயாரிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மம்முட்டி துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வழக்கமான டிடெக்டிவ் கதாபாத்திரம் போல் இல்லாமல் பிரபலமான துப்பறியும் நிபுணர் ஷெர்லக் ஹோம்ஸ் பாணியில் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு போலீஸ் அதிகாரியாக எண்ணற்ற படங்களில் துப்பறியும் பணியை செய்துள்ள மம்முட்டிக்கு ஒரு தனியார் டிடெக்டிவ் ஆக இந்த கதாபாத்திரம் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.