ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவிட்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் புதிய அப்டேட் வரும் 23ம் தேதி சூர்யாவின் 49 வது பிறந்த நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளின் போது 2007ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான வேல் படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் அசின், வடிவேலு, கலாபவன் மணி ஆகியோர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிராமத்து குடும்ப பின்னணியில் வெளியான இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.