பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
முதல்முறையாக தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் ஒருபுறம் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் ரயிலில் நிகழும் சம்பவத்தை மையமாக வைத்து ஆக் ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது. மிஷ்கினே இசையமைக்கிறார். இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாது பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். இப்போது டிரெயின் படத்தில் பாடியிருக்கிறார்.