படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

நடிகர் சரத்குமார் கடந்த 36 ஆண்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் அரசியலுக்கு சென்றாலும் நடிப்பை கைவிடவில்லை. இப்போது நாயகன் என்பதை தாண்டி குணசித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம்பொருள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அவர் நடிக்கும் 150வது படம் 'ஸ்மைல்மேன்'. இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். இவர் இதற்குமுன்'மெமரீஸ்' என்ற படத்தை இயக்கியவர். சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு முக்கியமான குற்றத்தை விசாரித்து வரும்போது ஒரு விபத்தில் சிக்கிய அவர் அல்சைமர் (நினைவு மறத்தல்) பிரச்னைக்கு உள்ளாகிறார். அவருக்கு கட்டாய ஓய்வும் கொடுத்து விடுகிறார்கள். பின்னர் அவர் தனிநபராக அந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. இது ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.