இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி | முதல் நாள் வசூல் : இந்திய அளவில் டாப் 10ல் தென்னிந்தியப் படங்கள் | மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற போது, ஒரு பாடல் மற்றும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு விழாவில் குட் பேட் அக்லி படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடல் கம்போஸ் செய்துள்ளேன். அந்த பாடல் சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டபோது மாஸாக நடனமாடினார் அஜித். இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆகவும் மிகப்பெரிய விருந்தாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .