டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் இன்று(ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படத்தின் முடிவில் 'இந்தியன் 3' படத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதில் சுதந்திரப் போராட்டக் காலக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் சேனாபதி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர் என சில காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. அதை விரிவுபடுத்தி சேனாபதியின் அப்பா வீரசேகரன் கதாபாத்திரமும் 'இந்தியன் 3'ல் வர உள்ளது.
முதல் பாகத்தில் மகன் சந்துரு, அப்பா சேனாபதி, இரண்டாம் பாகத்தில் அப்பா சேனாபதி மட்டும் இடம் பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்தில் சேனாபதி மற்றும் அவருடைய அப்பா வீரசேகரன் இடம் பெற உள்ளார்கள். அது மட்டுமல்ல வீரசேகரன் மனைவியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். 2025ம் ஆண்டில் 'இந்தியன் 3' வெளியாக உள்ளது.




