ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

'டாடா' படத்தை தொடர்ந்து ஒலிம்பியா மூவீஸ் அம்பேத்குமார் தயாரிக்கும் படம் 'வொய்ப்'. இதில் வீஜே விஜய் முதன் முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் கதை நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. இதில் அவருக்கு ஜோடியாக அதாவது அவரது மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இந்த படம் திருமணமான புதுமண தம்பதிகளுக்கு இடையிலான ஊடலையும், கூடலையும் காமெடியாக சொல்லும் படம்.
படத்தை ஆர்.ஹேமநாதன் இயக்குகிறார், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.




