ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

மிகப்பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா : தி ரூல்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்து வருகிறார்கள். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது “புஷ்பா தி ரூல் படம் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் 'கேஜிஎப் 2' படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும். 'புஷ்பா 2' வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும்” என்கிறார்.