‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதேசமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா
பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இந்த படத்தை கொல்லி சந்தோஷ் ரவிந்த்ரா என்பவர் இயக்கி வருகிறார். சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் முக்கியமான ஆக் ஷன் காட்சியில் நடித்தபோது ஊர்வசிக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.




