சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் நாளை(ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பின் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே பாடல்கள், டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதாவது நாளை படம் வெளியாகும் ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கான சிறப்பு காட்சி உடன் சேர்த்து மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‛துணிவு' படம் வந்த சமயத்தில் அதிகாலை சிறப்பு காட்சி கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தார். அந்த சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய நடிகர்கள் படங்கள் வரும்போது அல்லது பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வந்தது. அந்தவகையில் இப்போது இந்த படத்திற்கு சிறப்பு காட்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் மட்டுமின்றி அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.