பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் நாளை(ஜூலை 12) திரைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு 'இந்தியன் 3' வெளியாகும். இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து 'வேள்பாரி மன்னன்' சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா சமயத்தில் தான் 'வேள்பாரி' நாவலை படித்து முடித்தேன். மிகவும் சுவாரஸ்யமான வகையில் அவரது வாழ்க்கை சம்பவங்கள் இருந்தன. படிக்க படிக்க அவை காட்சிகளாக விரிந்தன. அதன்பிறகு அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அவை மொத்தம் 3 பாகமாக உருவாகும். வேள்பாரியாக நடிப்பது யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
நான் ரசிகர்கள் பார்வையில் இருந்தே கதை மற்றும் காட்சிகளை உருவாக்குகிறேன். ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. 'இந்தியன் 2' படப்பிடிப்பை நடத்தியபோது இரண்டு பாகங்களுக்கான கதை அதற்குள் இருந்தது. அவற்றை வெட்டி எறிய மனமில்லாமல் 'இந்தியன் 3'ம் பாகத்தை உருவாக்கினோம். 'இந்தியன் 4'ம் பாகம் எடுக்கும் திட்டம் இல்லை என்றார்.
கடையேறு வள்ளல்களில் ஒருவர் வேல்பாரி. பறம்பு மலையை தலைநகாராக கொண்டு ஆட்சி புரிந்தவர். அவர் ஆட்சியில் மக்கள் செழிப்புடன் வாழ்ந்தனர். இல்லை என்று வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவன் பாரி, பறம்பு மலையில் வளங்கள் கொட்டிக் கிடந்தது.
பாரியின் புகழை அழிக்கவும், பறம்பு மலை செல்வதை கொள்ளை அடிக்கவும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனித்தனியாக போர் தொடுத்து தோற்றனர். இறுதியாக மூவேந்தர்களும் இணைந்து பாரியை எதிர்த்து போராடி வென்றனர். பாரி மன்னனின் இந்த வீர கதையை கொஞ்சம் கற்பனை கலந்து சு.வெங்கடேஷன் நாவலாக எழுதியிருந்தார். அந்த நாவலையே ஷங்கர் படமாக இயக்க இருக்கிறார்.