காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இயக்குனர் ஷங்கர் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனர் என கொண்டாடபடுபவர். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் பற்றி கேள்வி எழுந்த போது அவர் கூறியதாவது, "வேள்பாரி நாவலை படத்திற்கான திரைக்கதையாக முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளேன். தற்போது முன் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதிகாரப்பூர்வமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என கூறினார்.