'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட் | சிகரெட் : ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள் | ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரம் கிடைக்காமல் போனது ஏன்: ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் |
தமிழ் சினிமாவில் வெளிவராமல் முடங்கிப் போன படங்கள் என எடுத்துக் கொண்டால் அந்த கணக்கே 500 படங்களைத் தாண்டும். ஆனால், சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளிவராமல் சிக்கலில் முடங்கியிருப்பது அதிர்ச்சிகரமான ஒன்று.
12 வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவர உள்ள 'மத கஜ ராஜா' படம் வெளிவர உள்ளது. இதையடுத்து முடங்கிப் போயுள்ள சில படங்களுக்கு விமோசனம் கிடைக்காதா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் முடிந்தும் சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள், ஆனால், வெளியாகவில்லை.
அது போல கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் முடங்கி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதன்பின் ஓடிடி தளத்தில் கூட நேரடியாக வெளியிட முயற்சித்தார்கள், அதுவும் நடக்கவில்லை.
இது போல இன்னும் சில படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகியும் வெளியாகாமல் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் பல கோடிகள் முடங்கிக் கிடக்கிறது.