பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சுசீந்திரன் இயக்கும் புதிய படம் '2கே லவ் ஸ்டோரி'. இதனை சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய 'கென்னடி கிளப்' படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதன்பிறகு 'வீரபாண்டியபுரம்' படத்தில் நடித்தார். இப்போது 3வது முறையாக சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். தவிர, பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பை இயக்குனர் பாண்டிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இயக்கும் இளைஞர்களை பற்றிய கதை. 2கே தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக உருவாகிறது. வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் ஒரு இளைஞர் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் நடத்துகிறோம் என்றார்.