பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இந்தியன் படத்தை அடுத்து கமலும், ஷங்கரும் மீண்டும் இணைந்திருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறைவான நேரங்கள் மட்டுமே படத்தில் இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது குறித்து இயக்குனர் ஷங்கர் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்தியன் - 2 படத்தில் கமல்ஹாசன் இடம்பெறாத காட்சிகளில் கூட அவரைப் பற்றியே மற்ற கேரக்டர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் படம் முழுக்க அவர் இடம் பெற்றிருக்கிறார் என்று கூறி இருந்தார்.
தற்போது கிடைத்த தகவல்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்தில் எப்படி இடைவெளிக்கு முன்பு கமல் என்ட்ரி கொடுத்தாரோ அதேபோன்று தான் இந்தியன் 2 படத்திலும் இடைவேளைக்கு சற்று முன்பு இந்தியன் தாத்தாவாக கமல் என்ட்ரி கொடுக்கிறாராம். ஆனபோதிலும் அதற்கு முன்பு அவரது கேரக்டர் குறித்துதான் மற்ற கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பார்களாம்.