300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.
இந்நிலையில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கூறுகையில், கங்குவா படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு(அக்., 10) வருகிறது. ரஜினியின் வேட்டையன் தீபாவளிக்கு வெளியாவதால் கங்குவா படத்தையும் அதேநாளில் வெளியிட விரும்பவில்லை. படத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இருந்தாலும் ரஜினி படத்துடன் மோதுவது சரியாக இருக்காது. அதனால் ஆயுத பூஜைக்கு கங்குவா படத்தை வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி ரஜினியின் வேட்டையன் படமும் ஆயுத பூஜைக்கு தான் வெளியாகும் என தெரிகிறது. ஒருவேளை ஆயுத பூஜைக்கு வேட்டையன் வந்தால் சூர்யாவின் கங்குவா தீபாவளிக்கு மாற வாய்ப்புள்ளது. அதேசமயம் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தையும் தீபாவளி ரிலீஸ் என்றுதான் கூறியுள்ளார்கள். அதனால் இப்போது திட்டமிட்டபடி இந்த படங்கள் அதே தேதியில் திரைக்கு வருமா? இல்லை வசூலை கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்வார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.