பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை |

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர தம்பதியர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி. காதலித்து திருமணம் செய்த இவர்கள் சமீபத்தில் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இவர்கள் இணைந்து பல படங்களில் பாடி உள்ளனர். அந்த பாடல்கள் எல்லாம் ஹிட்டாக அமைந்துள்ளன. இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சாயாதேவி இணைந்து நடித்திருக்கும் படம் சார். இந்த படத்திற்கு சித்து இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் உருவாகியுள்ள பனங்கருக்கா என்ற முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பின்னணி பாடி இருக்கிறார்கள். விவேகா எழுதியுள்ளார்.