சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

காமெடி நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய யோகி பாபு அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது வெப் சீரிஸிலும் ஹீரோவாக நடிக்கிறார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், காற்றின் மொழி, உப்பு கருவாடு, பொம்மை படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கும் வெப் தொடர் 'சட்னி சாம்பார்'. இதில் முதன்மை வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். அவருடன் வாணி போஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான "அமுதா கபே" என்ற பாரம்பரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப வருகை தருகிறார்கள்.
அடுத்ததாக யோகி பாபு தள்ளு வண்டியில் நடத்தும் ஒரு சிறிய சாலையோர உணவகமான 'அமுதா உணவகம்'. இங்குள்ள சட்னிக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த இரு உணவகங்களுக்கு இடையேயான போட்டியை மையப்படுத்தியே இந்த சீரிஸ் அமைந்துள்ளது. காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகி உள்ளது. தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
டீசர் லிங்க் : https://www.youtube.com/watch?v=Ww5FHzjFaPQ