'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த படம் 'டிமான்டி காலனி'. ஹாரர், திரில்லராக வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது 'டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை' அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி வருவதால் டிமான்டி காலனி 2ம் பாகத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.