அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகையான ஸ்ருதிஹாசன் இதுவரையில் இரண்டு காதலர்களைப் பிரிந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் கார்சேல் என்பவரை சில வருடங்கள் காதலித்தார். அதன்பின் விஷூவல் ஆரட்டிஸ்ட் சாந்தனு ஹசரிகா என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். அவர்களைப் பிரிந்த பிறகு தற்போது தனியாகத்தான் வசித்து வருகிறார்.
இன்ஸ்டா தளத்தில் நேற்று திடீரென ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது சில ரசிகர்கள் ஸ்ருதியின் கல்யாணம் பற்றிய கேள்விகளைக் கேட்டனர். அதற்கு எரிச்சலுடன் எதிலளித்துள்ளார் ஸ்ருதி. ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஸ்ருதியின் பதில்களும்…
கேள்வி : கல்யாணம் எப்போ ?
ஸ்ருதிஹாசன் : ஏன், உனக்கு கல்யாணம் எப்போ… எரிச்சலூட்டும் கேள்விகள்…திரும்பக் கேக்காதீங்க..
கேள்வி : நீங்க எப்போது கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க…
ஸ்ருதிஹாசன் : பண்ணிக்க மாட்டேன்…
கேள்வி : எப்படிப்பட்டவரை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க…
ஸ்ருதிஹாசன் : இது 2024… பெண்களிடம் இது மாதிரியான அறிவற்ற, தேவையற்ற கேள்விகளைக் கேக்கறத எப்ப நிறுத்தப் போறீங்க.
மேலே ஸ்ருதி பதிலளித்துள்ள விதத்தைப் பார்த்தால் அவர் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.