காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த 3வது படமாக 'கல்கி 2898 ஏடி' படம் முன்னேறியுள்ளது. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'சலார்' படத்தின் வசூலைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சலார்' படம் 600 கோடிக்கும் சற்றே கூடுதலாக தொகையை மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்ததை விடவும் அந்தப் படத்திற்கு வசூல் குறைவுதான். 'கேஜிஎப்' இயக்குனர் இயக்கிய படம் என்பதால் 1000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை.
அதேசமயம் கடந்த வாரம் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரூ.700 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் தற்போது 'பிரேக் ஈவன்' ஆகிவிட்டது. இனி வசூலாகும் தொகை லாபக் கணக்கில் சேரும். தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் அவருக்கு லாபம்தான். படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையே 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள்(சலார் தவிர்த்து) அனைத்துமே வசூல் ரீதியாகத் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவரையும் சேர்த்து காப்பாற்றியுள்ளது.