புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛டிமான்டி காலனி'. இவர்கள் கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாகிறது. தினமலர் இணையதளத்திற்கு அருள்நிதி அளித்த பேட்டி :
‛‛டிமான்டி காலனி 2 படம் வெறும் பிசினஸிற்காக மட்டும் பண்ணவில்லை. நிறையமுறை அஜய்யிடம் இந்த படம் பண்ணுவது பற்றி கேட்டுள்ளேன். அவரும் நிச்சயம் பண்ணுவோம், கொஞ்சம் பொறுங்க என்பார். பிறகு ஒருநாள் அவரே ஒரு சின்ன லீடு கிடைச்சுருக்கு என கூறி அதை ஒரு முழு கதையாக உருவாக்கினார். மேலும் எனது உதவியாளர் வெங்கி இயக்குவார், நான் தயாரிக்கிறேன், படம் முழுக்க நான் கூட இருப்பேன் என்றார். பட அறிவிப்பும் வந்தது. பிறகு வெங்கி தான் அஜய்யே இயக்கட்டும் என்று சொன்னார்.
டிமான்டி காலனி 2 படம் மேக்கிங்கிற்காகவே பேசப்படும். பெரிய வெற்றியை தரும் என நம்புகிறேன். இந்த படத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீடும் உள்ளது. அதன்பின் 4ம் பாகம் வரை இந்த படம் செல்லும். அதற்குமேல் போகாது. எங்களுடன் தங்கலான் உள்ளிட்ட படங்கள் வந்தாலும் டிமான்டி காலனி படத்திற்காக ரசிகர்கள் உள்ளனர். அந்த நம்பிக்கையிலும், விடுமுறை வருவதாலும் ரிலீஸ் செய்கிறோம்.
என்னை தேடி வரும் கதைகளை மட்டும் தான் நடிக்கிறேன். யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. அதேசமயம் என்னை வைத்து படம் எடுத்த பாண்டிராஜ், அஜய் போன்ற இயக்குனர்களுடன் கதை இருக்கா என கேட்டுள்ளேன். புது இயக்குனர்களை வைத்து நான் படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு கொஞ்சம் காலம் ஆகும்.
ஒருவேளை நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால் நிச்சயம் பிசினஸ் தான் செய்திருப்பேன். தாத்தாவின் எந்த கதையையும் என்னால் செய்ய முடியுமா என தெரியவில்லை. சரியாக செய்யவில்லை என்றால் எங்க வீட்டிலேயே திட்டுவாங்க. அதனால் அதனை ரசித்து போவதே நல்லது. அரசியலுக்கு யாரும் வேண்டுமானாலும் வாங்க, போங்க என்னை ஆள விடுங்க. எனக்கு இதில் எந்த கருத்தும் இல்லை''.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.