டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை | 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா | உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில் | கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்… |

ஓடிடிக்கள் வந்த பிறகு ஐந்து மொழிகளில் ஒரு படத்தை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. முன்னணி நடிகர்களின் படங்களை பான் இந்தியா படம் என தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அந்தத் திரையுலகத்தினர் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படமும் அடுத்த மாதம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூன்றாவது சிங்கிளான 'ஸ்பார்க்' பாடல் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற பாடலாக அமைந்தது. யுவனின் இசையைப் பற்றி பலரும் கண்டபடி விமர்சிக்க ஆரம்பித்தனர். விஜய் ரசிகர்களும் அந்தப் பாடல் பிடிக்கவில்லை என சொன்னது ஆச்சரியத்தை அளித்தது.
இருப்பினும் தமிழில் அந்தப் பாடல் தற்போது 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழில் பெற்ற பார்வைகளில் பாதியளவு பார்வைகளை ஹிந்தியிலும் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹிந்தியில் 4.5 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
ஹிந்தியில் இந்தப் பாடலை குனால் கஞ்சவாலா, யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு பாடியுள்ளனர். ஹிந்திப் பாடலின் வரிகள், குனால் குரல் ஆகியவை தமிழை விடவும் ஈர்ப்பாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர்.