கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மலையாளத்தில் பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகை மமிதா பைஜூ. தமிழில் ரெபல் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்போது ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த சமயத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் மமிதா பைஜூ பெயரில் இருந்து சில போலி கணக்கில் பதிவுகள் வந்தனு. இந்த நிலையில் மமிதா பைஜூ தனது இன்ஸ்டாவில், ‛தனக்கு எக்ஸ் தள பக்கத்தில் எந்த கணக்கும் இல்லை போலி கணக்குகளை உருவாக்கி தனது பெயரை அவதூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன்'' என பதிவிட்டுள்ளார்.