அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் முத்தையா. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வியடைந்தது. அடுத்த படத்திற்காக தொடர்ந்து சில முன்னனி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது தனது மகனை வைத்து முத்தையா 'சுள்ளான் சேது' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்கை ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க பேசி வந்தார் முத்தையா. ஆனால் இந்தபடம் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனால் நடிகர் அருள்நிதியை வைத்து அதிரடியான கிராமத்து கதைகளம் கொண்ட புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.