தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‛கங்குவா' என பேண்டஸி படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தைத் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க போகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, தாணு தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வந்தார்.
சமீபகாலமாக இப்படத்தில் சூர்யா விலகியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. நமக்கு கிடைத்த தகவலின் படி, வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகவில்லையாம். இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது என்கிறார்கள்.