பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛விடாமுயற்சி'. படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக இதன் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்றது. இப்போது மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. கடந்தவாரம் அஜித் அங்கு கிளம்பி சென்றார். படப்பிடிப்பில் பங்கேற்கும் முன்பாக அஜித் துபாயில் கார் ரேஸ் நடக்கும் டிராக்கிற்கு சென்று ரேஸ் காரை ஓட்டினார். இது தொடர்பான வீடியோ ஒன்று ஏற்கனவே வெளியானது. இப்போது அஜித்தின் மேலாளர் இதுதொடர்பாக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் விதவிதமான ரேஸ் கார்களை அதிவேகமாக ஓட்டி பார்த்தார். குறிப்பாக 222 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு காரில் அவர் சீறி பாய்ந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் இன்று டிரெண்ட்டாகி வைரலானது.