தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | 5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல் | 20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு | மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | காப்பிரைட் பிரச்னை தீராமல் ரிலீஸ் செய்யக்கூடாது : மோகன்லால் பரோஸ் படம் மீது வழக்கு | நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு | விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்பு | பிரச்னையிலிருந்து வெளிவர பிசாசு நடிகைக்கு உதவிய வேட்டையன் வில்லன் நடிகர் | அந்தரங்க லீக் வீடியோவுக்கு தில்லாக பதில் அளித்த ஓவியா |
நடிகர் பஹத் பாசில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது தனக்கு ஏடிஹெச்டி எனப்படும் பாதிப்பு இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். 41 வயதில் தான் தனக்கு இது தெரிய வந்ததாகவும் சிறுவயதிலேயே இதை கண்டறிந்திருந்தால் எளிதில் குணப்படுத்தி இருக்கலாம் என்று மருத்துவர் கூறியதாகவும் கூறினார். தற்போது அதே போல பிரபல மலையாள வில்லன் நடிகராக ஷைன் டாம் சாக்கோ தானும் இதே போல ஏடிஹெச்டி பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தெலுங்கில் தசரா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான ஷைன் டாம் சாக்கோ அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்குபவர். சமீபத்தில் கூட தனது காதலியுடன் பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறி அதிர்ச்சி அளித்தார். பெரும்பாலும் இவர் தன்னை பற்றி மீடியாக்களில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசி வருகிறார் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த நிலையில் தான் கவனக்குறைவு மற்றும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தும் ஏடிஹெச்ச்டி பாதிப்புக்கு தான் ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
ஆனால் இதை பாசிட்டிவான கோணத்தில் அணுகியுள்ள அவர், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் இது ஒரு பாதிப்பு என்பது போல தெரியும். ஆனால் எனக்கு இது உண்மையிலேயே ஒரு பயனுள்ள விஷயம்தான். கறை நல்லது என்று சிலர் சொல்வார்களே இதுவும் அதுபோலத்தான் என்று கூறியுள்ள அவர் இந்த பாதிப்பு உடையவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ரொம்பவே முயற்சிப்பார்கள் என்றும் கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் இருப்பதை தவிர்த்து வெளிப்புறங்களிலேயே இருப்பதற்கு விரும்புவார்கள் என்றும் அது போன்ற தாக்கம் தனக்கும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.