'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலகை சேர்ந்தவர்களாலேயே அழைக்கப்படும் அளவிற்கு புகழ்பெற்ற தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார் ராஷ்மிகா.
நடிப்பால் மட்டுமல்ல அவரது க்யூட்டான செயல்பாடுகளாலும் ரசிகர்களிடம் எந்தவித பந்தாவும் இன்றி பழகுவதாலும் ராஷ்மிகாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் அதிகமாகி வருகிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அவரும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அதுமட்டுமல்ல ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் சில வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்கா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் தனது தாய் மொழியான கொடவா பாஷையில் பேசியிருந்தார். கர்நாடகாவில் குடகு மலை பகுதியில் சேர்ந்த கூர்க் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராஷ்மிகா. அதேசமயம் அவர் பேசிய பாஷை புரியாத பல ரசிகர்கள் இது என்ன பாஷை, எந்த ஊர் மொழி என குழப்பத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ராஷ்மிகா கூறும்போது, “நீங்கள் அனைவரும் குழம்பி விட்டீர்கள் என்று தெரிகிறது. இது என்னுடைய தாய் மொழியான கொடவா பாஷை. குடகு பகுதியில் தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே.. என் வாழ்க்கை முழுவதும் எப்போதும் கொடவா பாஷையை பேசிக் கொண்டிருப்பேன். பேசும்போதே எவ்வளவு அழகாக ஒலிக்கிறது பாருங்கள்” என்று கூறியுள்ளார்.