'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். அதோடு சொந்தமாக படங்களும் தயாரித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு கேரளாவில் பூர்வீக வீடு இருந்தாலும் சினிமாவில் நடிக்க வசதியாக சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதோடு ரஜினிகாந்த், தனுஷ், சசிகலா உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரமாண்ட வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது. இந்த வீடு 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
தற்போது நயன்தாரா அந்த வீட்டின் முன் தான் நிற்பது போலவும், கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போலவும் படங்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு “நாம் நல்ல தருணங்களில் இருக்கிறோம். அதற்கு மேல் எதுவுமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புதிய வீட்டில் நயன்தாரா சத்தமே இல்லாமல் குடியேறி விட்டார் என்றும், முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டுள்ளார் என்றும் இருவித தகவல்கள் வெளியாகி உள்ளது.