ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஷங்கர் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள 'இந்தியன் 2' படம் வருகிற 12ம் தேதி வெளியாகிறது. தற்போது இதன் புரமோசன் பணிகளில் படப்பிடிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தின் டிரைலரில் “எல்லோரும் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்ற சமூக வலைத்தளங்களில்தான் பேசுகிறார்கள். களத்தில் ஒரு துரும்பைகூட கிள்ளிபோட வரவில்லை” என்பது போன்ற வசனம் இடம் பெற்றிருந்தது. இது ரஜினியை குறிப்பிட்டு வைக்கப்பட்ட வசனம் என்று ரஜினி ரசிகர்கள் கருதிக் கொண்டு அதற்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.
இதுகுறித்து மும்பையில் நடந்த புரமோசன் நிகழ்வொன்றில் கமல் கூறும்போது, “எனக்கும் ரஜினிக்கும் இருக்கும் தொடர்பு புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிறைய படங்களில் நடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மற்ற போட்டியாளர்கள் போல் நாங்கள் அல்ல. எங்கள் இருவருக்குமே ஒருவர்தான் குரு. எனக்கும், ரஜினிக்கும் இடையே பிற நடிகர்களைப் போல் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்களுக்குள் பொறாமை கிடையாது.
எங்கள் இருவருடைய பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகும்'' என்றார்.